ஈரோடு : ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் திருடு போன குழந்தையை 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். குழந்தையை திருடிய துப்புரவு பெண் தொழிலாளி மற்றும் யி4 லட்சத்திற்கு விலைக்கு வாங்கிய ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் அப்துல்ஹக்கீம் (34). லாரி டிரைவர்.
இவரது மனைவி மும்தாஜ் (29). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ள நிலையில், 2வதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 10ம் தேதி மும்தாஜ் பெண் குழந்தை பெற்றார். குழந்தை எடை குறைவாக இருந்ததால் இன்குபேட்டர் பராமரிப்புக்கு பிறகு நேற்றுமுன்தினம் குழந்தையை பெண்கள் வார்டுக்கு டாக்டர்கள் மாற்றினர்.
அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று துப்புரவு பணியாளர் சீருடையில் இருந்த பெண் கூறியதையடுத்து மும்தாஜின் தாயார் பீபிஜான் குழந்தையை தடுப்பூசி போடும் இடத்திற்கு எடுத்து சென்றார். அப்போது, அந்த பெண் குழந்தையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். மேலும், பீபிஜானை வார்டுக்கு அனுப்பினார். நீண்டநேரமாகியும் குழந்தையை வார்டுக்கு எடுத்து வராததால் சந்தேகமடைந்து தேடியபோது அந்த பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை.
இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கிருஷ்ணகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் துப்புரவு பெண் பணியாளர் ஜெகதாம்பாள் (48) என்பவரை மும்தாஜ் அடையாளம் காட்டினார். ஆனால் ஜெகதாம்பாள் மறுத்தார். இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெகதாம்பாள் குழந்தையை திருடி யி4 லட்சத்திற்கு விற்றதை ஒப்புக்கொண்டார். இது குறித்து ஈரோடு டவுன் டிஎஸ்பி பெரியய்யா கூறியதாவது:
குழந்தையை கவுந்தப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் ராமசாமி மற்றும் இவரது மனைவி ஓய்வு பெற்ற தலைமையாசிரியை சந்திரா ஆகியோருக்கு யி4 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டது. விசாரணையில் ராமசாமி, சந்திரா தம்பதியினருக்கு ஒரு பெண், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இதில் மகன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். குழந்தை பாக்கியம் இல்லாததால் பேரப்பிள்ளை வேண்டும் என்ற ஆசையில் ஏற்கனவே தங்களுக்கு அறிமுகமான ஜெகதாம்பாள் மூலம் மும்தாஜின் குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளனர். யி4 லட்சம் பணத்தையும் மீட்டுள்ளதோடு ஜெகதாம்பாள், ராமசாமி, சந்திரா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஎஸ்பி பெரியய்யா கூறினார்.
சஸ்பெண்ட்
துப்புரவு தொழிலாளி ஜெகதாம்பாளை ஈரோடு மாவட்ட அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதால் டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment