மலேரியா நோய்க் கிருமிகளை தாங்கி வருகின்ற கொசுக்கள் மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மலேரியா நோய்க் கிருமியைத் தாங்கிவரும் கொசு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் கொசுவைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அதனால், இந்தக் கிருமிகளை தாங்கி வருகின்ற கொசுவினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இவ்வாறு நோய்க்கிருமிகளை தாங்கிவரும் அந்தக் கொசுக்கள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
தமது இந்த ஆய்வுகள் மலேரியா எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்த எதிர்வு கூறலுக்கும், சிறப்பாக மணத்தின் மூலம் கொசுக்களை பிடிக்கும் பொறிகளை உருவாக்கவும் உதவலாம் என்றும் அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment