சிகாகோ: அமெரிக்காவின் லோவா மாநிலம், கிரிம்ஸ் நகரில் வசிப்பவர் லேனி ஹென்றி. இவரது மனைவி கேரன் ஹென்றி. வளர்ப்பு நாய் கேன்டியுடன் நேற்று வழக்கம் போல் வாக்கிங் சென்றார். அப்போது தெருவில் இருந்த ஒரு நாய் கேரனை கடித்து குதறியது.
அந்த பயங்கரம் குறித்து கேரன் கூறுகையில், செல்ல நாய் கேன்டியுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது லேப்ரடார் மிக்ஸ் இன நாய் ஒன்று என்னை பார்த்துவிட்டு ஆவேசமாக ஓடிவந்தது. என் மீது பாய்ந்து கீழே தள்ளியது. பின்னர் முகத்தில் கடித்தது. பின்னர் வயிறு, தொடை பகுதிகளிலும் கடித்தது. பீதியில் நான் அலறினேன். உடனே, என் செல்ல நாயை லேப்ரடார் துரத்தியது. அதன்பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து லேனி ஹென்றி கூறுகையில், மனைவியை அழைத்து வர காரில் சென்றேன். அங்கு லேப்ரடார் நாய் மனைவியை கடித்து குதறி கொண்டிருந்தது. அவளது முகம் முழுவதும் ரத்தம். உடனே காரில் இருந்து குதித்து ஓடினேன். அந்த நாய் என் மீது பாய்ந்து கை, தோள்களில் கடித்தது. ஆத்திரத்தில் நாயுடன் சண்டை போட்டு, அதன் மூக்கை கடித்தேன். வலியில் அந்த நாய் ஓடி விட்டது. உடனே எங்கள் செல்ல நாயையும், மனைவியையும் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன்Õ என்றார்.
நாய் கடியில் மூக்கை இழந்த கேரனுக்கு பல அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட லேனி தம்பதிக்கு பலர் பண உதவி செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment