வாஷிங்டன் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் சபையால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையால் நியமிக்கப்பட்ட குழுக்களில் ஒன்று, சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் (யுஎஸ்சிஐஆர்எப்). இதன் தலைவராக கத்ரினா லேண்டாஸ் ஸ்வெட் உள்ளார்.
யுஎஸ்சிஐஆர்எப் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், ‘குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் உள்ளன. இதனால் மோடிக்கு விசா வழங்குவதில் உள்ள தடையை தொடர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment