Thursday, 2 January 2014

நண்பரின் மனைவி உருவத்தைபச்சை குத்திய நேபாளி கைது


காத்மாண்டு:நேபாளத்தில், நண்பர் மனைவியின் உருவத்தை, நெஞ்சில் பச்சை குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.நேபாளத்தின், கர்வே மாவட்டத்தை சேர்ந்தவர், குமார் கேசி. லாரி டிரைவரான இவர், தன் நண்பரின் மனைவியின் உருவத்தை, நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.இதை அறிந்த குமாரின் நண்பர், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், குமாரை கைது செய்தனர்.பச்சை குத்தியதால் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு தரும் செயலில் ஈடுபட்ட குற்றத்தின் அடிப்படையில், குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, 'நைசாக' வழக்கை போலீசார் மாற்றியுள்ளனர்.'நாட்டில் இது போன்ற வித்தியாசமான குற்றத்திற்காக ஒரு நபர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை' என, காவல் துறை உயர் அதிகாரி கூறினார்.கைது செய்யப்பட்ட குமார், தன் நண்பரின் மனைவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், அவரின் நண்பரின் மனைவி, குமாருடன் நட்பு ரீதியாக மட்டுமே பழகியதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment