மதுரை: மதுரையில், சகோதரியின் கணவருக்கு, மறுமணம் ஏற்பாடு செய்த பெண்ணை, அரிவாளால் வெட்டிக் கொன்ற, கல்லூரி மாணவி, போலீசாரிடம் சரணடைந்தார். மதுரை, காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் வேலு மகள் கலையரசி, 20. இவருக்கும், வில்லாபுரம், செல்வகுமாருக்கும், ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை மாதத்திலேயே, குடும்ப பிரச்னையால், இருவரும் பிரிந்தனர். செல்வகுமாரின் தாய் தங்கவேலு, 50, கொடுமைப்படுத்துவதாக, கலையரசி, போலீசில் புகார் செய்துள்ளார். இந்நிலையில், செல்வகுமாருக்கு, மறுமணம் செய்து வைக்கும் முயற்சியில், தங்கவேலு ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த, கலையரசியின் தங்கை தங்கரத்தினம், 18, நேற்று காலை, பையில் அரிவாளை எடுத்துக் கொண்டு, தங்கவேலு வீட்டிற்கு சென்றார். அவரை, தலை, கைகளில் வெட்டி விட்டு, அவனியாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, தங்கவேலு, நேற்று மாலை, இறந்தார்.
கைதான தங்கரத்தினம், மதுரை, தனியார் கல்லூரியில், பி.ஏ., (தமிழ்) படித்துக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment