தஞ்சை: மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியால், தஞ்சை அருகே கழுத்தை அறுத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். தஞ்சை தில்லை நகரை சேர்ந்தவர் சுகுமாறன். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மகன் மனோஜ்குமார் (19). தஞ்சை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே தெருவில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவரிடம் மனோஜ்குமார் பழகினார். அதே மாணவியிடம் அண்ணா காலனியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான 25 வயது வாலிபர் ஒருவரும் அடிக்கடி பேசினார். இது தொடர்பாக அந்த வாலிபருக்கும் மனோஜ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி திடீரென மாயமானார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு தாலிவெட்டி ஆற்றில் மனோஜ்குமார் சடலமாக மிதந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. மார்பில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது. மாணவியை காதலிக்கும் போட்டியில் அண்ணா காலனி சென்ட்ரிங் தொழிலாளியும், அவரது நண்பர்களும் தான் மனோஜ்குமாரை கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது
No comments:
Post a Comment