இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது குழந்தைகள் தொலைக்காட்சி சேனல்கள் பார்ப்பது, செல்போன்கள், வீடியோ கேம்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார்.
கேமரூனின் குழந்தைகளான நான்சி, எல்வென் மற்றும் புளோரன்ஸ் ஆகியோர் சிறுவர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சேனல் ஆன டிஸ்னி சேனலை பார்ப்பது கூடாது என கூறியுள்ளார். தற்போது அவர்கள் இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர்.
மேலும், அவர்கள் காலையில் டி.வி. பார்ப்பதற்கும் மற்றும் வார விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கும் கேமரூன் தடை விதித்துள்ளார். கேமரூனின் மகள் நான்சி படம் வரைவதில் ஆர்வம் உள்ளவராகவும், மகன் எல்வென் கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறியுள்ளனர். இந்த தடை அவர்களை வேறு ரசனைகள் கொண்டவர்களாக மாற்றியுள்ளது என்று கேமரூன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment