Thursday, 23 January 2014

பெண் போலீசை காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்


கள்ளககாதலனுடன் பெண் போலீசை கையும், களவுமாக கணவர் மடக்கினார். இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்தவர் சிவா(வயது 25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
நான் பெண் போலீஸ் ஒருவரை காதலித்து திருமணம் செய்தேன். எங்கள் இல்லற வாழ்க்கையின் பலனாக, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் எனது மனைவி, சென்னைக்கு பயிற்சிக்காக வந்தவரை திடீரென காணவில்லை.
அவரை நான் தேடி வந்தேன். தற்போது அவர், சென்னை சைதாப்பேட்டையில், ஒரு வாடகை வீட்டில் தங்கி இருப்பதாகவும், சென்னை ஆயுதப்படை போலீசில் பணிபுரிவதாகவும் தெரிய வந்தது.
அவரை சந்திக்க, நான் என் குழந்தையுடன் வந்தேன். என்னுடன் எனது மனைவியின் தாயாரும் வந்திருந்தார்.
சைதாப்பேட்டையில் குறிப்பிட்ட முகவரியில், நான் போய் பார்த்தபோது, அங்கு அதிர்ச்சியான காட்சியை கண்டேன். அங்கு என் மனைவியை, இன்னொரு வாலிபருடன் பார்த்தேன். அந்த வாலிபருடன், எனது மனைவி குடும்பம் நடத்தியதை அறிந்தேன்.
அந்த வாலிபரும் போலீஸ்காரர் என்று தெரிய வந்தது. எனது மனைவி இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எனக்குஎனது மனைவி அப்போது நடந்து கொண்ட முறை என்னை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்னையும், எனது குழந்தையையும் நீங்கள் யார்? என்று எனது மனைவி கேட்டார். அவரது தாயாரைக்கூட, யார் என்று கேட்டு, எனது மனைவி ஆச்சரியத்தை உண்டாக்கினார்.
எனது மனைவியை இந்த சூழ்நிலையில் கூட நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். எனது குழந்தைக்காக, எனது மனைவி எனக்கு வேண்டும். எனது மனைவியை அவரது காதலனிடம் இருந்து மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு சிவா தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment