Monday, 20 January 2014

மணப் பெண்ணுக்கு கிராக்கி வெளிநாட்டு பெண்களை மணக்கும் சீன ஆண்கள்


பெய்ஜிங்: உலகிலேயே அதிகளவு மக்கள் தொகை கொண்ட சீனாவில், குடும்பக்கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. தம்பதியினர் ஒரு  குழந்தை மட்டும் பெற்று கொள்ளவேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதனால் பெண்களின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது.  இதனால் மணப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் வெளிநாட்டு பெண்களை மணக்கவேண்டிய நிலைக்கு சீன ஆண்கள்  தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சீன தேசிய புள்ளியல் துறை தலைவர் மா ஜியான்தங் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2013 ம் ஆண்டு மக்கள்  தொகை கணக்கெடுப்பில் சீனாவின் மக்கள் தொகை ( 1.36 பில்லியன்)  136 கோடியாக உள்ளது. இதில் ஆண்கள் எண்ணிக்கை 69.72 கோடி,  பெண்களின் எண்ணிக்கை 66.34 கோடி.  ஆண்களைவிட சுமார் 3,38 கோடி பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். இதனால் திருமண  வயதில் உள்ள சீன ஆண்கள் தகுந்த பெண் கிடைக்காமல் வியட்நாம் உள்ளிட்ட வெளிநாட்டுப்பெண்களை தேடுகின்றனர் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment