ஈரான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஷாட்டில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்ற 299 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திளுடன் சவுதி அரசுக்கு சொந்தமான ‘போயிங் 767’ ரக விமானம் இன்று மதீனா நகரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக விமானத்தின் வலதுபுற சக்கரம் வெளியே வருவதில் இடையூறு ஏற்பட்டது. இதனால், அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு மதீனா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அனுப்பினார்.
அதிகாரிகளும் உரிய அனுமதியை வழங்கினர். இதனையடுத்து, விமானத்தை தாழ்த்தி ஓடுபாதையில் இறக்குவதற்கு விமானி முயன்றார். விமானம் சமமான நிலையில் தரை இறங்குவதற்கு வலது மற்றும் இடது புறத்தில் உள்ள சக்கரங்கள் ஒரே நேரத்தில் தரையை தொட வேண்டும்.
ஆனால், திடீர் கோளாறு காரணமாக வலதுபுற சக்கரம் கீழே இறங்காததால் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய அந்த விமானம் நிலை தடுமாறியது. விமானத்தின் வலதுபுற வயிற்றுப் பகுதி ஓடுபாதையில் தேய்த்துக் கொண்டே சென்றது. இதனால் ஏற்பட்ட உராய்வின் வெப்பத்தில் விமானத்தில் இருந்து தீப்பொறி கிளம்பியது.
இந்த அதிர்வினால் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் நிலைதடுமாறிப் போனார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 17 பேர் முதலுதவிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment