Sunday, 19 January 2014

உடலை மறைத்து ஆடை அணிவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு மத்திய பிரதேச மந்திரி


மத்திய பிரதேச தலைநகர் போபாலுடன் ஒப்பிடும் போது,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்று அந்த மாநில உள்துறை மந்திரி பாபுலால் கவுர் போபால் நகரில் தெரிவித்தார்.
சென்னை நகரில் பெண்கள் தங்கள் உடலை மறைத்து ஆடை அணிவதாலும், கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாலும் அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்ற மாநிலங்களை விட குறைவு என்று அப்போது அவர் கூறினார். சமீபத்தில் சென்னை நகருக்கு தான் சென்றிருந்ததாகவும், அப்போது அங்குள்ள சில மூத்த போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசிய போது அவர்கள் இந்த விவரத்தை தன்னிடம் கூறியதாகவும் பாபுலால் கவுர் தெரிவித்தார்.
கடந்த 2012–ம் ஆண்டு சென்னை நகரில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் 19.32 சதவீதம்தான் என்றும், ஆனால் போபால் நகரில் இது 71.38 சதவீதம் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment