பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
மத்திய அரசு சிறுபான்மை இன மக்களின் ஓட்டுக்களை குறி வைத்து சில திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கள் வாழ்வா தாரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ப அழகுகலை பயிற்சி, தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் திறமையை மேம்படுத்த இந்த பயிற்சி உதவும். 6 மாதங்கள் பயிற்சி அளித்து அவர்களை சொந்தக் காலில் நிற்க வைப்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்த ரூ. 978 கோடி செலவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஆந்திரா, பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடங்கி 2017–க்குள் இந்த திட்டத்தை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பயனாக நாடெங்கும் சுமார் 9.2 லட்சம் முஸ்லிம் பெண்கள் பயன்பெறுவார்கள். விரைவில் இந்த புதிய திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment