Monday, 9 June 2014

மது போதையில் மிசோரம் மாநில முதலமைச்சர்: போலீஸ் வழக்கு


அய்žஸ்வால்: மிசோரமில் அம்மாநில முதல்வர் மதுபோதையில் இருந்ததாக வெளியான போட்டோ உண்மையில்லை எனவே அவர் மீது வழக்குப்பதிய முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பூரணமதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. மீறி மது குடிப்பவர்கள் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 4-ம் தேதி சமூக வலைதளம் ஒன்றில் போட்டோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது.அந்த போட்டோவில் மிசோரம் முதல் அமைச்சர் லால் தன்ஹாவாலா அவரது மனைவி இருவரும் மது போதையில் இருப்பது போன்று வெளியானது. இது குறித்து அய்ஸ்வால் போலீஸ் ஸ்டேசனின் லால்தன்புயா பச்சவூவா என்பவர் புகார் கூறினார்.

போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலத்தில் முதலமைச்சரே மது குடித்த செய்தி பரவியது.இது குறித்து அய்ஸ்வால் மாவட்ட எஸ்.பி. திங்கிலியானாசாய்லோ கூறுகையில், புகைப்படம் வெளியானதில் உண்மையில், அவர்கள் மது அருந்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புகைப்படம் போலியாக சித்திரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனவே அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அவர்கள் உண்மையில் பீர் குடித்துள்ளனர். முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment