Sunday, 19 January 2014

செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய 400 கிறிஸ்தவ பாதிரியாரை நீக்கிய முன்னாள் போப் ஆண்டவர்

செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய 400 கிறிஸ்தவ பாதிரியாரை நீக்கிய முன்னாள் போப் ஆண்டவர்

முன்னாள் போப் ஆண்டவர் 17–வது பெனடிக்ட் கடந்த ஆண்டு இவர் தானாகவே முன் வந்து பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெனடிக்ட் போப் ஆண்டவராக இருந்த போது ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடம் ‘செக்ஸ்’ சில்மிஷம் மற்றும் கற்பழிப்பு புகார்கள் கூறப்பட்டன.
எனவே செக்ஸ் புகாரில் சிக்கிய 400 பாதிரியார்களை அவர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு முன்பு 2 ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அதில் 2011–ம் ஆண்டில் 300 பேரும், 2012–ம் ஆண்டில் 100 பேரும் அடங்குவர். இந்த தகவலை வாடிகனின் செய்தி தொடர்பாளர் பெடரிகோலாம் பார்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment