Saturday, 25 January 2014

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நெல்லை முதலிடம்














பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவில், நெல்லை மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்கு பதிவுகள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டம் என்ற, உள்ளூர் சட்டத்தின் கீழ், வழக்குகள் பதியப்படுகின்றன.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், கற்பழிப்பு, மானபங்கம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தமிழகம் முழுவதும், கடந்த, ஒன்பது மாதங்களில், 6,377 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம் மற்றும் உள்ளூர் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில், நெல்லை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், நெல்லை மாவட்டத்தில், 731; சென்னையில், 544; விழுப்புரத்தில், 413 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.உள்ளூர் சட்டத்தின் கீழ், நெல்லை, 607; கன்னியாகுமரி, 287; மதுரையில், 268 வழக்குகள் பதிவாகி உள்ளன

No comments:

Post a Comment