Monday, 6 January 2014

ர்நாடக அரசு ஊழியர்கள் பேஸ்புக், டிவிட்டர் பயன்படுத்த தடை


ர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது.

குறிப்பாக, கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment