Tuesday, 28 January 2014

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் சுமார்பல லட்சக்கனோர் பங்கேற்றனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் லட்சக்கனோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடும், மாநில அளவில் 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர்,திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும், மும்பை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என மூன்று இடங்களிலும் சிறைச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அந்த அமைப்பைச் சேர்ந்த  லட்சக்கனோர் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்.
போராட்டத்துக்கு அந்த அமைப்பின் நிர்வாகி பி.ஜைனுல்ஆபிதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு: இந்த போராட்டத்தில் சுமார் லட்சக்கனோர் பங்கேற்றதால், மார்ஷல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேறு சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
மேலும் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 2 மணி வரை நடைபெற்றதால் எழும்பூர் பகுதியிலும், அண்ணாசாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கைது இல்லை: சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
கோவை, நெல்லை: இதேபோல கோவை, திருச்சி, நெல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில  திருச்சியில்  மற்றும் பேரும் கோவையில் லட்சக்கனோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் 100 00 பேர் பெண்கள் உள்பட பங்கேற்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

No comments:

Post a Comment