புதுடில்லி: 'ஒரு அரைவேக்காடுக்கும், கொலைகாரனுக்கும் இடையில், இந்தியா, மாட்டிக் கொண்டு விழிக்கிறது' என, காங்., துணைத் தலைவர் ராகுலையும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், விமர்சித்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள கருத்து, பெரும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில், காங்., ஆட்சியுடன், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது.
சமீபகாலமாக, அந்த கட்சி தலைவர்களின் நடவடிக்கைகள், கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றன. பொது இடத்தில், போலீஸ் தடையை மீறி, கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தியது, கிழக்கு ஆப்ரிக்க நாடான, உகாண்டாவைச் சேர்ந்த பெண்களிடம், டில்லி மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, தரக்குறைவாக நடந்து கொண்டது, ஆகியவை, சர்ச்சையை ஏற்படுத்தின. தற்போது, கெஜ்ரிவால், சமூக வலைத் தளமான, 'ட்விட்டர்' மூலம், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைக்கும், விஷால் தத்லானி என்பவர், ஆம் ஆத்மி ஆதரவாளர். அவர், சமூக வலைத் தளமான, ட்விட்டரில், 'ஒரு அரைவேக்காடுக்கும், கொலைகாரனுக்கும் இடையில், இந்தியா, மாட்டிக் கொண்டு விழிக்கிறது' என, தெரிவித்திருந்தார். இதில், காங்., துணை தலைவர் ராகுலையும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், அவர், மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
No comments:
Post a Comment