பீஜிங்: சீனாவில், பலமாக கொட்டாவி விட்ட, இளைஞரின் நுரையீரல் கிழிந்தது. சீனாவின், ஹீபி மாகாணத்தைச் சேர்ந்தவர், ஓயூ, 26. சில நாட்களுக்கு முன், காலையில் எழுந்ததும், பலத்த கொட்டாவி விட்டார். அதன் பின், அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும், அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் ஓயூவுக்கு தீடீரென, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஓயூவின் நுரையீரலின், காற்றுப் பை கிழிந்து, துளை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று, உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால், அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Wednesday, 8 January 2014
பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment