உலகம் முழுதும் ஏறக்குறைய 40 சதவீத பெற்றோர்கள், குறிப்பாக மத்திய நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களின் குழந்தைகளிடம் இருந்தே கணிணியை இயக்குவதைப் பற்றியும் இன்டர்நெட் உபயோகிப்பதைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள்.
சாண்டியாகோ, சிலி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இளைஞர்கள் தாங்கள் தெரிந்து கொண்ட கணிணி, செல்போன், இண்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் தங்கள் பெற்றோர்களை பாதிக்கிறார்கள். எனவே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து அவற்றை உபயோகிக்கும் விதத்தை அறிந்து கொள்ள ஆர்வர் காட்டுகிறார்கள் என தெரிய வந்துள்ளது.
பெண்கள் மற்றும் ஏழைகள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில் பின் தங்கிய நிலையில் உள்ளதாக தகவல் தொடர்பியல் இதழில் வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த தகவல் மூலம் குறைந்த வருமான பிரிவு மக்களிடையே தகவல் தொடர்பு சாதனம் பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment