உலகில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பருமன் ஆன மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இது குறித்து லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
அதில், சர்வதேச அளவில் 146 கோடி பேர் உடல் பருமனாகி குண்டு மனிதர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. 1980 முதல் 2008–ம் ஆண்டுகளுக்கு இடையேதான் இந்த விகிதம் அதிகரித்துள்ளது.
வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில்தான் உடல் பருமன் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு உணவு பழக்க வழக்கத்தின் மாற்றமே காரணம் என தெரிய வந்துள்ளது.
வளரும் நாடுகளில் தனி மனிதனின் வருமானம் அதிகரித்து வசதியான வாழ்க்கை ஏற்படுகிறது. அதனால் உணவு பழக்க வழக்கம் மாறுகிறது. கொழுப்பு மற்றும் சர்க்கரை சத்து மிகுந்த உணவு வகைகளை சாப்பிடுகின்றனர்.
மேலும், வழக்கத்துக்கு மாறாக தேவைக்கு அதிகமான அளவு உணவை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment