புதுடில்லி: "பேஸ்புக்' சமூக வலைதள பயன்பாட்டாளர்களில், 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக, "டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்' வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த, ஆய்வாளர்கள், பேஸ்புக் சமூக வலைதளத்தின், "அட்வர்டைசிங் பிளாட்பார்மில்' உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர்.
தற்போது, 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது, 110 கோடி குறைவு. இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது, "வாட்ஸ்அப், டுவிட்டர்' மற்றும், "ஸ்நாப்ஷாட்' போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி
உள்ளனர், இதுகுறித்து, கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில், தங்களுடைய பெற்றோரும், பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால், தங்களின் அனைத்து செயல்பாடுகளையும், அவர்கள் அறிந்து கொள்வதாகக் கூறியுள்ளனர். எனவே, மற்ற வலைதளங்களில் கணக்குகளை துவக்கி, தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது தெரியவந்து
உள்ளது.
வலைதளத்தின் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள, தலைமை நிதி அதிகாரி டேவிட் எபர்ஸ்மேன், நிறுவனத்தின் பங்கு விற்பனை, 15 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் கூறிஉள்ளார்.
No comments:
Post a Comment