2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் மனிதர்கள் தோன்றியுள்ளதாக இதுவரையிலும் நம்பி வந்த நிலையில், பிரிட்டன் ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மனிதர்கள் முதன்முதலாக எப்போது தோன்றினர் என்பது குறித்து ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எல்ஹாய்க் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். டான் கிரவ்ர் ஆகிய இருவரும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இவர்கள் மனிதர்களின் மரபணுவில் உள்ள ஒய்(Y) குரோமோசோம்களைக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்து புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதில், 2 லட்சத்து 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் முதல் மனிதனாக கருதப்படும் ஆதாம் உலகில் வாழ்ந்து வந்தார்.
ஆதாமும், ஏவாவும் ஒரே கால கட்டத்தில் தான் ஆப்ரிக்க நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment