மும்பை: மும்பையில், முஸ்லிம் மதத்தலைவரின், இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் உயிரிழந்தனர்; 48 பேர் காயமடைந்தனர்.
தாவூத் போரா : மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஒரு பிரிவான, "தாவூத் போரா' சமூகத்தின் தலைவராக இருந்தவர், முகமது புர்கானுதீன், 102. மும்பையின், மலபார் ஹில் பகுதியில் உள்ள வீட்டில், புர்கானுதீன், நேற்று முன்தினம் இரவு, காலமானார். இந்த செய்தியை கேள்விப்பட்டதும், தாவூத் போரா சமூகத்தினர், நள்ளிரவு முதலே இப்பகுதியில் குவிய துவங்கினர். மகாராஷ்டிர முதல்வர், பிருத்விராஜ் சவான் வீடு இப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியில் குவிந்ததால், ஏற்பட்ட நெரிசலில், 18 பேர், உயிரி ழந்தனர்; 48 பேர், காயமடைந்தனர். இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment