ஸ்கேன் சென்டர்களில் பெண்களுக்கு ஸ்கேன்
எடுக்கும்போது, அந்த பெண்களுடன் உறவினர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று
கலெக்டர் மு.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன்
மையங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெண்களின் வயிற்றுக்கோளாறு காரணமாக
ஸ்கேன் எடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு ஸ்கேன் செய்யும் போது அவர்களுடன்,
அவர்களை சார்ந்தவர்களை உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள்
சார்பில் தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதையொட்டி ஸ்கேன் மையங்களில் பெண்களுக்கு
ஸ்கேன் எடுக்கும் போது அவரை சார்ந்த ஒருவர் உடன் இருக்க அனுமதிக்க
வேண்டும். இது தொடர்பாக புகார் எதுவும் இருப்பின் நெல்லை மாவட்ட நலப்பணிகள்
இணை இயக்குனரிடம் முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்
ஸ்கேன் மையங்கள் தங்கள் உரிமத்தை தவறாமல் புதுப்பிக்க வேண்டும். உரிமம்
புதுப்பிக்கப்படாமல் செயல்படும் ஸ்கேன் மையங்கள் கண்டறியப்பட்டால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment