Tuesday, 28 January 2014

பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு பெண்களின் ஆடைகளும் நடவடிக்கைகளும் காரணம்-ஆஷா மிர்ஜி















நாக்பூர் : பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு பெண்களின் ஆடைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என மகாராஜ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஆஷா மிர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடனான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று நாக்பூரில் கட்சியின் மகளிர் அணி தொண்டர்களிடையே பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆஷா மிர்ஜி, நாட்டில் நடைபெறும் பாலியல் பாலத்காரங்கள் குறித்து கருத்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும், கடந்த ஆண்டு மும்பையில் சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
டில்லி நிர்பயா வழக்கில், இரவு 11 மணிக்கு தனது நண்பருடன் அப்பெண் சினிமாவிற்கு போக வேண்டிய அவசியமா? 6 ஆண்கள் இருந்த பஸ்சில் தனியாக இந்த பெண் எதற்காக ஏற வேண்டும்? சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த பெண் பத்திரிக்கையாளர். எதற்காக மாலை 6 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான அந்த இடத்திற்கு செல்ல வேண்டும்?; என்று ஆஷா மிர்ஜி கேள்வி எழுப்பினார்.

மேலும், பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுவதற்கு பெண்கள் அணியும் ஆடைகளும், அவர்களின் நடவடிக்கைகளும், தேவையற்ற இடங்களுக்கு செல்வதும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆஷா மிர்ஜி, மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினரகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாடு முழுவதும் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஷா இந்த கருத்தை கூறி உள்ளார். டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும், பெண்களின் பாதுகாப்பிற்கு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டங்களும் அதிகம் வெளி வர துவங்கி உள்ள நிலையில், ஆஷா மிர்ஜி கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment