சீனாவில் நிங்ஸியா மாகாணத்தில் உள்ள ஸிஜி நகரில் உள்ள ஒரு மசூதியில் மத தலைவரின் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது அதில் பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய சிறப்பு உணவு வழங்கப்பட்டது. எனவே அதை வாங்க கூட்டம் அலை மோதியது. ஒரே நேரத்தில் பலர் முண்டியடித்து சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது ஒருவரை ஒருவர் ஏறி மிதித்தபடி உணவு வாங்கினார்கள். இச்சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நிங்ஸியா மாகாணம் மஞ்சள் ஆற்றங்கரையில் உள்ளது. இருந்தாலும் இதன் பாதி பகுதி பாலைவனமாகும். இங்கு முஸ்லிம்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் சீன மொழி பேசும் ஹுய் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment