இங்கிலாந்தில் உள்ள கிழக்கு லண்டனை சேர்ந்தவர் மேரிகோனி (வயது 21). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்தார். இருவரும் தோழிகள்.
ஆனாலும் நயோனி ஓனி மீது மேரிகோனிக்கு பொறாமை இருந்து வந்தது. மேரிகோனியை விட நயோனி ஓனி அழகாக இருப்பார். இதனால்தான் இந்த பொறாமை ஏற்பட்டது.
எனவே நயோனிஓனி அழகை சிதைக்க மேரிகோனி முடிவு செய்தார். இதற்காக ஆசிட்டை வாங்கி நயோனி ஓனி மீது ஊற்றினார். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேரிகோனி கைது செய்யப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment