மரபுசார்ந்த அரிய வகை பார்வை குறைபாட்டை மரபணு சிகிச்சை மூலம் போக்க முடியும் என்ற வியத்தகு சாதனையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
விழித்திரைக்கு பின்புறம் உள்ள ஒளியை உள்வாங்கும் செல்கள், மெல்ல மெல்ல வலுவிழந்து, இறந்தும் விடுவதால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் இத்தகைய பார்வை இழப்பு நோய்க்கு உள்ளாகும் நிலை இருந்து வருகிறது.
கண்களின் விழித்திரையை பலவீனமடையச் செய்து, அதன் விளைவாக பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் இத்தகைய மரபணுவை மாற்றுவதன் மூலம் இந்த நோய் குறைபாட்டை போக்க முடியும் என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவர்கள் தங்களின் பரிசோதனைகளின் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனர்.
'ஜீன் தெரபி' எனப்படும் இத்தகைய மரபணு மாற்று சிகிச்சையின் மூலம் பார்வைத் திறனை முழுவதுமாக இழந்துவிட்ட 6 நோயாளிகளிடம் சோதனை முறையில் இந்த நவீன சிகிச்சை முறையை மேற்கொண்டதில், சில மாதங்களுக்குப் பிறகு மங்கலான வெளிச்சத்தில் பார்வைத் திறனில் மேம்பாடுகள் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்தனர்.
ஆறு பேரில் இருவரால் சிறிய எழுத்துகளையும் படிக்க முடிந்தது என்ற தகவலை 'லான்செட்’ மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment