சென்னை: "இடஒதுக்கீடு பிரச்னையில், தி.மு.க., போராட தயங்காது' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
"சிறப்பு மருத்துவமனைக்கு, அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது' என, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை, சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார். இட ஒதுக்கீடு, தி.மு.க.,வின் அடிப்படை கொள்கை. அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு, எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், தி.மு.க., அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. தானே களம் அமைத்து போராடவும் தயங்காது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment