Saturday, 4 January 2014

எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு


உலகின் மிக நீளமான நைல் நதி பாயும் எகிப்தில் மிகப்பழமையான புராதான சின்னங்கள் நிறைய உள்ளன. இங்குள்ள லக்ஸர் நகரில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3-ம் அமெனோடெப் மற்றும் 2-ம் ரமீசெஸ் மன்னர்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் சிறந்த கோவில்கள் நிறைய உள்ளன.

இப்பகுதிகளை ஆராய்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்லறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கு பழங்கால எகிப்திய கோர்ட்டுகளுக்கு பீர்கள் தயாரித்து வழங்குவதில் சிறந்த விளங்கிய ஒருவரின் உடல் உள்ளே புதைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த கல்லறையின் சுவற்றில் அக்காலத்து மதச்சடங்குகளுடன் கூடிய தினசரி நடவடிக்கைகளை விளக்கும் பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை இன்றும் அழியாமல் நன்றாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் முடிவடையாது உள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிக்கு பின்னரே, பார்வையாளர்கள் இதை கண்டுகளிக்கும் வண்ணம் இந்த கல்லறை  புதுப்பிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment