மதுஅருந்திவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டுவதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று தமிழ்நாடு இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
பயிற்சி முகாம்
சிவகங்கை ஆயுதப்படை அரங்கில் காவல்துறை சார்ந்தவர்களுக்கு விபத்து நடந்த இடத்தில் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள் மற்றும் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் வரை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்திய மருத்துவ கழகம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் முகுந்த் கோட்னிஸ் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு இந்திய மருத்துவ கழக தலைவர் தேர்வு டாக்டர் சுரேந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
அதிவேகம், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், ஓட்டுனர்களுக்கு அதிக வேலைப்பளு, ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டுதல் பெரும் பாலான விபத்திற்கும், உயிர் இழப்பிற்கும் காரணங்களாகும். சுமார் 77 சதவீத விபத்துகள் போதையில் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது.
கடுமையான சட்டம்
எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டுவதை தடுக்க கடுமையான சட்டம் தேவை. மேலும் விபத்து நடந்தவுடன் காயம் பட்டவர்களை சென்றடைவது காவல்துறை என்பதை கருத்தில் கெண்டு விபத்தில் உயிரிழப்பை குறைக்க தமிழக இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் டாக்டர்கள் தேவகுமார், முத்தையா தலைமையில் ஒரு குழு தமிழகம் தழுவிய ஒரு திட்டத்தை வகுத்து அதை சாலை பாதுகாப்பு வாரத்தில் செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment