Friday, 3 January 2014

டி.வி.–இணைய தளங்களில் கெஜ்ரிவால் வருகையால் மோடி மவுசு குறைகிறது

வடமாநில டி.வி.–இணைய தளங்களில் கெஜ்ரிவால் வருகையால் மோடி மவுசு குறைகிறது

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதும் வடமாநில டி.வி.க்களும், இணைய தளங்களும் அதை பெரிது படுத்தி தகவல்கள் வெளியிட்டன. தினமும் அவரைப் பற்றிய கருத்து கணிப்புகள், பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றி பரபரப்பாக வெளியாகி வந்தன.
5 மாநில சட்டசபை தேர்தலின் போதும் நரேந்திர மோடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசையும், பாரதீய ஜனதாவையும் வீழ்த்தியதால் டி.வி., இணைய தளங்களின் பார்வை கெஜ்ரிவால் பக்கம் திரும்பியது.
அதற்கு ஏற்ப கெஜ்ரிவால் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கெஜ்ரிவால் பற்றிய தகவல்களுக்கு வடமாநில டி.வி.க்களும், இணைய தளங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
முன்பு நரேந்திர மோடிக்குத்தான் வடமாநில டி.வி.க்கள் இணைய தளங்கள் அதிக முக்கியத்துவம் அளித்தன. சாதாரண பொதுக் கூட்டத்தில் பேசினாலும் அவை பற்றிய தகவல்களை பரபரப்பாக வெளியிட்டன.
தற்போது கெஜ்ரிவால் முக்கியத்துவம் பெற்று வருவதால் நரேந்திர மோடிக்கு மவுசு குறைந்து வருவதாக அரசியல் நோக்கங்கள் தெரிவித்தனர்.
டுவிட்டர் இணைய தளத்தில் பாரதீய ஜனதா பற்றிய கருத்துக்களுக்கு 4,693 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நரேந்திர மோடி பற்றிய தகவல்களை 30 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். அதே சமயம் கெஜ்ரிவால் பற்றிய கருத்துக்களை 3,418 பேர் பேசுகிறார்கள். 36 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இது மோடி மவுசு குறைந்து வருவதையே காட்டுகிறது என்று ஊடக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment