Monday, 6 January 2014

கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்















பெங்களூரு:பள்ளி கழிவறைகளை, மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம், கர்நாடக மாநிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடர்கிறது.

"இந்தியாவில், பள்ளிக்கூடங்களில், மாணவ, மாணவியருக்கு என்று தனித்தனியாக கழிவறைகள் இருக்க வேண்டும். கழிவறைகள் இல்லாத பள்ளிகளில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த விஷயத்தில், கர்நாடக, காங்கிரஸ் அரசு, மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில், இந்த பிரச்னையை, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், வெட்ட வெளிச்சமாக்கினார்.ஆரம்ப பள்ளிக்கூடங்களில், வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து பராமரிப்பதற்கு என, தனியாக ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை.

வகுப்பறைகளை சுத்தம் செய்ய, இரண்டு, மூன்று மாணவர்களை ஏவி விட்டு, ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வர்; சில சமயங்களில் ஆசிரியர்களும், அவர்களுடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.விளையாட்டு மைதானங்களில், சிதறியுள்ள குப்பையை அள்ளி, சுத்தம் செய்வது, கழிவறைகளை சுத்தம் செய்யும் படியும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.இது போன்ற வேலைகளை செய்வதற்கு, குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள் என, பெற்றோர் எவ்வளவோ முறையிட்டும், தீர்வு காணப்படவில்லை.

No comments:

Post a Comment