கடந்த 1976–ம் ஆண்டில் யூகோஸ்லோவியாவில் ‘தி லியோ போவ் ஆர் லோவா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் கட்டப்பட்டது. இது கனடா நாட்டின் துறைமுகத்துக்கு வந்தபோது கப்பலின் உரிமையாளர் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் தத்தளித்தார்.
கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரால் சம்பளம் தர முடியவில்லை. அதை தொடர்ந்து அக்கப்பல் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கு ரூ.36 லட்சத்துக்கு விற்கப்பட்டது.
பல பிரச்சினைகளுக்கு பிறகு தனது பயணத்தை தொடங்கிய அக்கப்பல் புயலில் சிக்கி சேதமடைந்தது. எனவே அதை கடந்த 2012–ம் ஆண்டிலேயே உடைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அட்லாண்டிக் கடலில் பயணம் செய்யும் அக்கப்பல் இங்கிலாந்தை நோக்கி வருகிறது. அதை அங்கு நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கப்பல் இயங்காமல் நின்றதால் அதில் நூற்றுக்கணக்கான எலிகள் இருக்கின்றன. அவை உணவுக்காக ஒன்றையொன்று அடித்து சாப்பிட்டு ராட்சத அளவில் கொழுத்துள்ளன.
கப்பல் இங்கிலாந்துக்கு வரும் பட்சத்தில் அவை ஊருக்குள் புகுந்து மக்களை கடித்து சுவைக்கும். எலிகள் மூலம் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment