Thursday, 2 January 2014

தேர்தல் யுக்தி மதுக்கடை நேரம் குறைப்பு '


உத்தமபாளையம்:தமிழகத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளின் நேரத்தை, 8 மணி நேரமாக குறைக்கவும்; கிராமப்புற கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அரசு பரிசீலித்து வருகிறது. பொங்கல் பண்டிகையில், இந்த அறிவிப்பு வெளிவர உள்ளது.தமிழகத்தில் 8,238 மதுக் கடைகள் இருந்தன. இவற்றில், நெடுஞ்சாலை கடைகளை அகற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டது; இதனால் கடைகளின் எண்ணிக்கை 6,673 ஆக குறைந்துள்ளது.கடைகளின் எண்ணிக்கை குறைந்தாலும், 'டாஸ்மாக்' வருவாய் மட்டும் குறையவில்லை; ஆண்டிற்கு, 32 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில், மதுவிலக்கு கோரிக்கை எழுப்பப்பட்டாலும், அரசு கண்டுகொள்ளவில்லை.

மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு, அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது.இதனால், மதுக்கடைகளை முறைப்படுத்துவது குறித்து, அரசும் பரிசீலிக்கத் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக கடை திறந்திருக்கும் நேரத்தை, பகல் 12 மணியில் இருந்து, இரவு 8 வரை என, குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (பழைய நேரம், காலை 10- இரவு 10 மணி). மேலும், கிராமங்களில் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன், அறிவிப்பை வெளியிட்டு, 'நல்ல பிள்ளை' என்ற பெயர் எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன் வெளிவரலாம்

No comments:

Post a Comment