Wednesday, 1 May 2013

பொது மக்களின் பாதுக்காப்பு குறித்த நிலைபாடு-சுப்ரீம் கோர்ட் கேள்வி

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தனி பாதுகாப்பு அதிகாரிக்கு இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் பெயரில் அன்டில்லா சொகுசு பங்களாவில் தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என கடிதம் வந்தது.

இதனை அடுத்து மத்திய அரசு, முகேஷ் அம்பானிக்கு நாட்டின் பெருந்தலைவர்களுக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது சுப்ரீம் கோர்ட், முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

சுப்ரீம் கோர்ட், புதுடெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தால் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்க மாட்டார் என்று கூறியுள்ளது. மேலும் தனி மனிதருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களின் பாதுக்காப்பு குறித்த நிலைபாடு என்ன என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment