நியூயார்க், மே 1-
தேவையற்ற கருவை தவிர்க்க பெண்கள் பல்வேறு கருத்தடை முறைகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில், தனது துணைவருடன் உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் முறையும் ஒன்றாகும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வாக இவ்வகை மாத்திரைகள் உள்ளது.
உடலுறவை எதிர்பார்த்து, சற்று நேரத்திற்கு முன்னர் சாப்பிடும் மாத்திரைக்கு நிகரான பலனை இந்தவகை மாத்திரைகளும் அளிப்பதால், எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் பெண்கள், கவலையில்லாமல் மருந்துக் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உபயோகிக்க தொடங்கினர்.
இதனால், மிக குறைந்த வயதில் பெண்கள் ஆண் துணையை தேடிக்கொள்கிறார்கள் என கருதிய அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில், இவ்வகை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விற்க தடை விதித்திருந்தது.
இந்த தடையை நீக்கி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இனி 'பிளான்-பி-ஒன் ஸ்டெப்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை இன்றி வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment