திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்களை விட 13.51 லட்சம் பெண்கள் அதிகமாக உள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இதன்படி, இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியது. 2011ம் ஆண்டு கணக்கின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 1 லட்சத்து 93,422. இதில், ஆண்கள் 62 கோடியே 37 லட்சத்து 24,248. பெண்கள் 58 கோடியே 64 லட்சத்து 69,174. தேசிய மக்கள் தொகையின்படி ஆண்களை விட 3.72 கோடி பெண்கள் குறைவாக உள்ளனர். ஆனால், கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். இது பற்றி, கேரள மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபால மேனன் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3 கோடியே 34 லட்சத்து 6061. இதில், ஆண்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சத்து 27,412. பெண்களின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 78,649. ஆண்களை விட 13 லட்சத்து 51,237 பெண்கள் அதிகமாக உள்ளனர். கேரளாவில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் உள்ளனர். மலப்புரம் மாவட்டம்தான் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 41 லட்சத்து 12 ஆயிரத்து 920 பேர் உள்ளனர். வயநாடு மாவட்டத்தில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8 லட்சத்து 17 ஆயிரத்து 420. கடந்த 10 ஆண்டுகளில் கேரள மக்கள் தொகையில் 4.92 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மேனன் கூறினார்.
Sunday, 12 May 2013
கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment