ரஷ்யாவில் மாணவி ஒருவர் அழகாக இருந்ததற்காக அவருடன் பயிலும் சக மாணவிகள் அவரை குட்டையில் உள்ள அழுக்கு நீரை குடிக்கவைத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவின் கோர்கினோ பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் நான்கு மாணவிகள் தங்களுடன் பயிலும் சக மாணவியான வ்லாடா கோலோட் (13) என்பவரை அடித்து கீழே தள்ளிவிட்டு தெருக்களில் உள்ள அழுக்கு நீரை குடிக்க வைத்துள்ளனர்.
ஒல்கா குசேவா (16), கோலோபோர்ட்கோ (14), சாஷா ரட்சோவா (15) மற்றும் எக்கத்ரினா ச்ரெல்ட்சோவா (15) ஆகிய மாணவிகள் செய்த இந்த கொடூர செயலை அங்குள்ள இரண்டு மாணவர்கள் காணொளி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அசிரியர்கள் இந்த காணொளியை கண்டவுடன் மாணவிகளை வ்லாடாவிடம் மன்னிப்புக் கேட்க கூறியுள்ளனர்.
சக மாணவிகள் மன்னிப்பு கேட்டதும் வ்லாடா பள்ளியில் உள்ள அனைவரின் முன்னிலையில் மாணவிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment