
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில், நள்ளிரவில் ரோந்து சென்ற போலீசார், கணவன் - மனைவி உல்லாசத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்ததும், அவர்களை மிரட்டி, மீண்டும் உல்லாசத்தில் ஈடுபட வைத்து, "வீடியோ'வாக படம் பிடித்து, இன்டர்நெட்டில் ஏற்றியுள்ள கொடுமையான சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், குகா அணை என்ற, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில், கடந்த வாரம் நள்ளிரவில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த பகுதிக்கு அருகில் உள்ள, கிராமம் ஒன்றைச் சேர்ந்த, இளம் தம்பதி, குகாஅணை பகுதியில், உல்லாசமாக இருந்து உள்ளனர். அதை மறைந்திருந்து பார்த்த சில போலீசார், தம்பதியை மிரட்டி, தங்கள் முன், மீண்டும் உல்லாசத்தில் ஈடுபட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். போலீசாருக்கு பயந்து, அந்த தம்பதி, மீண்டும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அதை, அந்த, கொடுமைக்கார போலீசார், மொபைல் கேமராவில் படம் பிடித்து உள்ளனர். மூன்று நாட்களுக்கு முன், அந்தப் படங்கள், இணையதளத்தில் உலா வந்ததைப் பார்த்த கிராமத்தினர், அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் முன் கூடி, போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் போலீஸ் ஸ்டேஷனை தாக்கவும் செய்தனர்; அவர்களை போலீசார் விரட்டி அடித்ததில், 20 பேர் காய மடைந்தனர். இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment