Saturday, 18 May 2013

குடித்து விட்டு தந்தையை கொலை செய்த மகன்




2 மனைவிகள்
வளசரவாக்கம், அம்பேத்கார் சாலை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 75). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி(52), சரோஜா என 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 3 மகன், 2 மகள் என 5 பேரும், 2–வது மனைவி சரோஜாவுக்கு பாபு(35) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
வாரத்திற்கு 2 நாள் என 2 மனைவிகள் வீட்டிற்கும் மாறி, மாறி சென்று தங்கி வருவதை பரமசிவம் வழக்கமாக கொண்டிருந்தார். பரமசிவத்துக்கு சொந்தமாக ஆற்காடு சாலையில் 3 கடைகளும், அம்பேத்கார் சாலையில் 2 கடைகளும் உள்ளன. இந்த 5 கடைகளையும் அவர் வாடகைக்கு விட்டு உள்ளார்.
தந்தையுடன் தகராறு
அம்பேத்கார் சாலையில் உள்ள 2 கடைகளையும் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு தந்தையிடம் பாபு அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது
 .பாபுவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாககூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாபு, தனது தந்தை பரமசிவத்திடம், அம்பேத்கார் சாலையில் உள்ள 2 கடைகளையும் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டு மீண்டும் தகராறு செய்தார்.
கீழே தள்ளியதில் படுகாயம்
அதற்கு பரமசிவம், ‘‘நீ வேலைக்கு போகாமல் இருக்கிறாய். உனக்கு ஏன், நான் கடையை எழுதி கொடுக்க வேண்டும்? அதெல்லாம் கொடுக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாபு, தந்தையிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் பாபு, தனது தந்தையை பிடித்து கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பரமசிவம், மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பரமசிவம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார், தந்தையை கீழே தள்ளி விட்டு கொலை செய்ததாக பாபுவை கைது செய்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment