வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில், தனது மூன்று பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளிவிட்ட தாய் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். இன்று முற்பகல் 8h30அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக... 2ஆம் இணைப்பு
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லதுர்சிகா (வயது 6) சன்சிகா (2 ½ வயது) மற்றும் நிதர்சிகா (1 ½ வயது) ஆகிய மூன்று பிள்ளைகளையே குறித்த தாய் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றில் குதித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக இந்தப் பெண் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment