Friday, 17 May 2013

வந்தே மாதரம் பாடச்சொல்லி எவரையும் வற்புறுத்த முடியாது..! லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு..!

வந்தே மாதரம் பாடச்சொல்லி எவரையும் வற்புறுத்த முடியாது..! லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு..!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி ஷபீகுர் ரஹ்மானுக்கு எதிராக, சவுரப் ஷர்மா என்பவர் லக்னோ உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; ‘ஜன கன மன’ தான் இந்தியாவின் தேசிய கீதம் எனவும் வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது என்றார். ஆகவே இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என்று வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்..!

No comments:

Post a Comment