Tuesday, 20 August 2013

ஊரை விட்டு ஒதுக்கியதால் 13 குடும்பங்கள் தவிப்பு: கலெக்டரிடம் புகார்


நாகப்பட்டினம்: நாகை அருகே, 13 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள, கிராம ஜமாத்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை கலெக்டரிடம், பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

நாகை மாவட்டம், அறங்கக்குடியில், 3,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த, 13 முஸ்லிம் குடும்பத்தினர், ரம்ஜான் பண்டிகையின் போது, பெண்களும் பங்கேற்கும் வகையில், கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில், சிறப்பு தொழுகை நடத்தினர். இதையடுத்து, மத கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக் கூறி, 13 குடும்பத்தினரையும், கிராம ஜமாத்தார் ஒதுக்கி வைத்ததுடன், கிராமத்தில் வசிக்கும் மற்றவர்கள் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என, கட்டுப்பாடு விதித்துள்ளனர். கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதாக, 13 குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும், போலீசில் புகார் அளித்தனர். நேற்று, கலெக்டர் முனுசாமியை சந்தித்து, தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள கிராம ஜமாத்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு அளித்தன

No comments:

Post a Comment