முசாபர்நகர்: ""அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக்காக்கவே, விஸ்வ இந்து பரிஷத்தின், "சவுராசி கோசி யாத்திரை'க்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என, உத்தர பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், அசம்கான் கூறியுள்ளார்.
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, நாளை முதல், செப்டம்பர், 13ம் தேதி வரை, 84 கி.மீ., தூரத்திற்கு, அயோத்தியிலிருந்து யாத்திரை மேற்கொள்ள, விஸ்வ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. ஆறு மாவட்டங்கள் வழியாகச் செல்லும், இந்த சவுராசி கோசி யாத்திரைக்கு, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், "திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும். அதைத் தடுக்க முற்பட்டால், ஏற்படும் விளைவுகளுக்கு மாநில அரசே பொறுப்பு' என, பரிஷத் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, முசாபர் நகரில், நிருபர்களிடம் பேசிய, மாநில அமைச்சர் அசம்கான் கூறியதாவது: உ.பி.,யில், சட்டம், ஒழுங்கு, அமைதி, மத நல்லிணக்கத்தை பேணிக்காப்பது, மாநில அரசின் கடமை. பாதுகாாப்பு காரணங்கள் கருதியே, பரிஷத்தின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, சில தரப்பினர், மத ரீதியான பதட்டத்தை உருவாக்க நினைக்கின்றனர்; அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அசம்கான் கூறினார்.
No comments:
Post a Comment