Friday, 30 August 2013

குழந்தையை கொன்று விட்டு ஜாலியாக குத்துச்சண்டை பார்த்த பெண்



அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்த குழந்தையை கொன்று விட்டு ஜாலியாக குத்துச்சண்டை பார்த்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பெத்லகேம் நகரை சேர்ந்தவர் அமன்டா கேதரின் ஹெயின்(வயது 26).
திருமணம் ஆகாமலேயே கர்ப்பிணியான கேதரின், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17ம் திகதி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து குத்துச்சண்டை பார்த்து கொண்டிருந்தார்.
திடீரென அங்குள்ள குளியலறைக்கு சென்றுவிட்டு, சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெளியே வந்த ஹெயினின் உடைகளில் ரத்தக்கறை படிந்திருந்தது.
பின்னர் வெளியே சென்று ஒரு சிகரெட்டை புகைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்து போட்டியை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
மறுநாள் அந்த குளியலறையை சோதனையிட்ட ஊழியர், அங்கே ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு ஆண் குழந்தையின் பிணம் இருந்ததை கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து ஹெயினிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனக்கு குழந்தை பிறந்ததையும், உடனே அந்த குழந்தையை மூச்சடக்கி கொலை செய்து விட்டதையும் தெரிவித்துள்ளார்.
இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment