
நியூயார்க் , அமெரிக்காவில் காதலி அதிக நேரம் தன்னோடு செலவழிக்காமல் தனது குழந்தையோடு செலவழிப்பதா என்ற ஆத்திரத்தில் அவளது குழந்தையை ரூ.6000க்கு விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் உள்ள ஸ்டாலன் தீவைச் சேர்ந்தவர் பால் மார்க்வெஸ் (வயது 23). இவர் நாளேடு ஒன்றில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பிரிவில் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில், தன்னிடம் 2 மாத குழந்தை ஒன்று உள்ளது.
அதனை ரூ.6000க்கு விற்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். மேலும் அந்த விளம்பரத்தில் அந்த குழந்தைக்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பதால் சில மாதங்களில் இறந்து விடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே என்னால் அதனை பராமரிக்க முடியவில்லை. அதனை பார்க்கும் போதெல்லாம் பதற்றமாக இருக்கிறது. எனவே யாராவது வாங்கிக் கொள்ளுங்கள் என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
மேலும் அந்த விளம்பரத்தின் கீழே ஒரு செல்போன் எண்ணையும் கொடுத்திருந்தார். அந்த எண்ணில் பலரும் தொடர்பு கொண்டு பேசிய போது அதில் ஒரு இளம் பெண் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பால் மார்க்வெஸ்ஸை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குழந்தையின் தாயோடு பால்மார்க்வெஸ்ஸுக்கு ஆன் லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டொருமுறை நேரிலும் சந்தித்து பழகியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவே, தன்னை கவனிக்காமல், குழந்தையோடு அந்த பெண் இருப்பதை கண்டு பொறாமையால், ஆத்திரமடைந்து அவ்வாறு விளம்பரம் கொடுத்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து பால்மார்க்வெஸ்ஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
No comments:
Post a Comment