
சென்னை:சிறுமியை கற்பழித்து, விபசாரத்தில் தள்ளியதாக கைது செய்யப்பட்ட, வியாசர்பாடியைச் சேர்ந்த, அறவாளி சித்தரின் வீட்டில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை யிட்டு, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து, போலி சித்தரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி கோவிலில், மாங்காய் விற்பனை செய்து வந்த, 14 வயது சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், குறி கேட்கச் சென்ற இடத்தில், ஒருவர் பலாத்காரம் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து, "சைல்டு ஹெல்ப் லைன்' உதவியுடன், தமிழக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதாகவும், தாயின் அரவணைப்பில், ஏழாம் வகுப்பு வரை படித்ததாகவும், படிப்பு சரியாக வராததால், பெரம்பூர், பி.வி., காலனியில் ஆசிரமம் அமைத்து, குறி சொல்லி வந்த அறவாளி சித்தர், 45, என்ற ஜோதிடரிடம், தாய் அழைத்துச் சென்றுள்ளார்.
தோஷம் இருப்பதாகவும், அதை கழிக்க இரவு பூஜை செய்ய வேண்டும் என்று கூறிய சித்தரிடம், தனியாக விட்டுவிட்டு, தாய் வெளியில் காத்திருந்தார். அப்போது, தனி அறையில், மயக்க தீர்த்தத்தை கொடுத்து, பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து, தாயிடம் சுஜி கூறியபோது, அவர் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பல பேரிடம் பணத்திற்காக அனுப்பி யுள்ளார். இந்நிலையில் சுஜி, கடந்த மாதம், செல்வத்திடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, தப்பியுள்ளார்.
அதன்பின்,ரயில் ஏறி திருப்பதிக்கு சென்று, அங்கு, கையில் இருந்த பணத்தை கொண்டு, மாங்காய் வாங்கி,வெட்டி விற்பனை செய்து வந்ததாகவும், இரவு நேரத்தில், பக்தர்கள் செல்லும் வழியில் படுத்திருந்ததாகவும், அங்கிருந்தவர்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்ததாகவும் போலீசிடம் கூறியுள்ளார்.மேலும், தன் தாயிடம் தன்னை ஒப்படைக்க வேண்டாம், என்றும் தெரிவித்து உள்ளார்.
இதைத் தொடர்ந்து, சுஜியின் தகவல்படி, சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு நாட் களுக்கு முன், சுஜியின் தாயையும், சிறுமியை முதலில் கற்பழித்து, விபசார கும்பலிடம் அனுப்பிய, அறவாளி சித்தரையும் கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி.,விபசார தடுப்பு பிரிவு போலீசார், வியாசர்பாடி, பி.வி.,கோவில் தெருவில் உள்ள அறவாளி சித்தரின் வீட்டின் பூட்டை உடைத்து, சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்து, பல ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், சுஜியை விபசாரத்தில் ஈடுபடுத்திய, செல்வம், குமார், ஜெயா, மற்றொரு ஜெயா உள்ளிட்ட சிலரை தேடி
வருகின்றனர்.இவரது நடவடிக்கைகளின் பின்புலமாக, அரசியல் புள்ளிகள், பணக்காரர்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே தற்போது அவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
வருகின்றனர்.இவரது நடவடிக்கைகளின் பின்புலமாக, அரசியல் புள்ளிகள், பணக்காரர்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே தற்போது அவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment